கல்லூரி படிக்கும் காலத்தில் எழுதிய கவிதை! நகரத்தில் வாழும் எங்களுக்கும் பல நன்மைகள் உள்ளது, கிராமத்தில் உள்ளவர்களுக்கு இல்லாதது என, ஒரு சிறு விமர்சனம் என் முன் வைக்கப்பட்ட போது, இது நகரத்தில் வாழும் அடுத்தவர்களுக்காக எழுதியது அல்ல. என்னையே நான் கிராம வாசியாகவும் நகர வாசியாகவும் வரிந்து கொண்டு, கிராமவாசி கனகு, நகரவாசி கனகுவிடம் கேட்பதாகத் தான் எழுதினேன், என பொய் சமாதானம் சொன்னேன். ஆனால் இன்று, இந்த கவிதையில் உள்ள அத்தனையும், என்னளவிலே உண்மையாகிப் போனது தான் நிதர்சனம். யதார்த்தத்தின் மீது பழி போட்டு விட்டு நானும் நகரமாகிப்போனேன்!
இரைச்சலை இசையாக்கி,
சத்தத்தை சங்கீதமாக்கி,
அவசரத்தையே
அடுத்த அடியாகக் கொண்டு,
இயற்கையைக் கூட
இயந்திரமாக்கி,
இரத்தவோட்டமுள்ள
இயந்திரமாகிப் போன,
நகரத்து நண்பருக்கு...
அடுத்த வீட்டில்,
யாரென்றறியாத
'அபார்ட்மென்ட்' வாசம்!
கரி அமில வாயுவையே
காசு கொடுத்து வாங்கி
சுவாசம்!
அம்மியிலிருந்து
ஆசிரியர் வரை
இயந்திரத்தில்!
ஈன்றவர்களோ
உதவும் கரங்களில்
ஊசல்களாய்!
எட்டாவது மாடியில் வீடு
ஏழடுக்கு குளிர்சாதனப்பெட்டி
ஐம்பத்தாறு 'சேனல்' தொலைக்காட்சி
ஒன்றாம் வகுப்பிற்கே
ஓராயிரம் புத்தகங்கள்
ஔவைக்கும் சங்கம்
அஃதிலும் ஊழல்!
இன்னும் இன்னும்
எத்தனையோ
அவசிய, அனாவசிய
தேவைகள்
வசதிகள்
வாய்ப்புகள்!
ஆயிரம் இருக்கட்டுமே!
என்றேனும்
பசித்துப் புசித்ததுண்டா?
இல்லை,
படுத்தகணம் அறியாமலுறங்கிய
பழக்கம்தானுண்டா?
யாரென்றறியாத
'அபார்ட்மென்ட்' வாசம்!
கரி அமில வாயுவையே
காசு கொடுத்து வாங்கி
சுவாசம்!
அம்மியிலிருந்து
ஆசிரியர் வரை
இயந்திரத்தில்!
ஈன்றவர்களோ
உதவும் கரங்களில்
ஊசல்களாய்!
எட்டாவது மாடியில் வீடு
ஏழடுக்கு குளிர்சாதனப்பெட்டி
ஐம்பத்தாறு 'சேனல்' தொலைக்காட்சி
ஒன்றாம் வகுப்பிற்கே
ஓராயிரம் புத்தகங்கள்
ஔவைக்கும் சங்கம்
அஃதிலும் ஊழல்!
இன்னும் இன்னும்
எத்தனையோ
அவசிய, அனாவசிய
தேவைகள்
வசதிகள்
வாய்ப்புகள்!
ஆயிரம் இருக்கட்டுமே!
என்றேனும்
பசித்துப் புசித்ததுண்டா?
இல்லை,
படுத்தகணம் அறியாமலுறங்கிய
பழக்கம்தானுண்டா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக